News March 26, 2025
ஒரு தொகுதி குறைந்தாலும் அரசை எதிர்த்து போராட்டம்: பிரேமலதா

நேற்று காவேரிப்பாக்கத்தில் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது நாடாளுமன்ற தொகுதி வரையறையில் தமிழகத்தில் ஒரு தொகுதி குறைந்தால் கூட தேமுதிக மத்திய அரசை எதிர்த்து போராட்டம் செய்யும். தமிழக நலனை முதன்மையாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். இப்போது உள்ள தொகுதிகளை குறைக்க எவ்விதத்திலும் சம்மதிக்க மாட்டோம் எனக் கூறினார்.
Similar News
News April 18, 2025
ராணிப்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

ராணிப்பேட்டையில் இயங்கி வரும் Swap Development Solutions என்ற தனியார் நிறுவனத்தில் உதவியாளருக்கான 20 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ஆம் வகுப்புக்கு கீழ் படித்திருந்தால் போதும். முன் அனுபவம் தேவை இல்லை. 18 – 40 வயதிற்குட்பட்ட இருபாலரும் வரும் ஜூன் 11ஆம் தேதிக்கு முன்னர் <
News April 18, 2025
ஒரே நாளில் 1,800 நெல் மூட்டைகள் விற்பனை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் தானியங்கள், நெல் பயிர் களை கலவை – வாழைப் பந்தல் சாலையில் உள்ள ஒழுங்குமுறை கூடத்தில் விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று (ஏப்ரல்.17) ஒரே நாளில் 1800 நெல் மூட்டைகள் கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குவிந்ததுஇதில் ஸ்ரீ நெல் ரகம் அதிகபட்சமாக ரூ.1,429 க்கு விற்பனை
News April 18, 2025
கோவிலில் சிலை திருடிய பெண் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைனூரில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோயிலில் வெண்கல மாணிக்கவாசகர் சிலை மற்றும் பூஜைப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஜனனி (30) என்பவர் நேற்று (ஏப்ரல்.17) கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸாரிடமிருந்து தப்பியோடினார். சுமார் 3 மணி நேர தேடலுக்குப் பின் பொய்ப்பாக்கம் பகுதியில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.