News April 15, 2025
ஒரு க்ளிக் உங்க பணம் காலி சைபர் கிரைம் எச்சரிக்கை!

கரூர் மக்களே, அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளை நம்பி, அவற்றில் உள்ள எந்தவொரு இணையதள இணைப்பையும் (லிங்க்) கிளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி சார்ந்த தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது. சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க, 1930 என்ற எண்ணை அழையுங்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.(ஷேர் செய்யுங்கள்)
Similar News
News December 1, 2025
கரூர்: உழவர் சந்தை காய்கறி விலை பட்டியல்!

கரூர் உழவர் சந்தையில் இன்று (01.12 .2025) திங்கட்கிழமை காய்கறி மற்றும் பழங்களுக்கான தினசரி விலை பட்டியல் வெளியிடப்பட்டது. தக்காளி, உருளைக்கிழங்கு, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் முதல் வாழைப்பழம், மாம்பழம் போன்ற பழங்கள் வரை தரம் 1 மற்றும் தரம் 2 விலையில் பட்டியல் அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
News December 1, 2025
மல்லயுத்தப் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற மாணவர்!

கரூர், ராமகிருஷ்ணாபுரம் C.S.I. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் பத்ரிநாத். மல்யுத்தம் போட்டியின் 55 கிலோ பிரிவில் சிறந்த திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் அவருக்கு நினைவுப் பரிசும் பதக்கமும் வழங்கி பாராட்டினர்.
News December 1, 2025
கரூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு <


