News May 2, 2024
ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொள்ள அறிய வாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் பிற துறைகளில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் பிற துறைகளில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்களும் கீழ்க்காணும் ஆவணங்களை அளித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Similar News
News September 1, 2025
தி.மலையில் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 1, 2025
தி.மலையில் வேண்டுதல்களை நிறைவேற்றும் வரத ஆஞ்சநேயர்

தி.மலை, பெரணமல்லூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வரத ஆஞ்சநேயர் கோயில், பக்தர்களின் நம்பிக்கைக்குரிய தலமாக உள்ளது. மன தைரியம் பெறவும், சனி தோஷங்கள் நீங்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், திருமணத் தடைகள் அகலவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். முழு நம்பிக்கையுடன் வேண்டும் அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். துன்பத்தில் வாடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
News September 1, 2025
தி.மலையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஒத்திவைப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாதந்தோறும் செவ்வாய் கிழமை நடைபெறும் விவசாயிகள் குறைந்த தீர்வு கூட்டம், இந்த மாதம் நாளை (செப்டம்பர் 2) நடக்க இருந்தது. இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக குறை தீர்வு கூட்டம் 9ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெறும் என வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் தெரிவித்தார்.