News March 10, 2025
ஒன்றரை லட்சம் பேர் விருந்து சாப்பிடும் ஆலயம்

உடன்குடி அருகே மெஞ்ஞானபுரத்தில் உள்ளது தூய பவுலின் ஆலயம். கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் இந்த ஆலயத்தின் மிக நேர்த்தியாக கட்டப்பட்ட 192 அடி உயர கோபுரம் 1868 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மிகவும் புகழ்மிக்க இந்த ஆலயத்தின் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கடைசி வியாழன் அன்று மாபெரும் அசன விருந்து பண்டிகை நடைபெறும். இதில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள்.
Similar News
News April 21, 2025
தூத்துக்குடியில் ரூ.25,000 ஊதியத்தில் வேலை

தூத்துக்குடியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதி பிரிவில் 10 காலி பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிப்ளமோ படித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
News April 21, 2025
பூட்டை உடைத்து 14 பவுன் நகை திருட்டு

தூத்துக்குடி வி. இ ரோட்டை சேர்ந்தவர் ஜாக்சன் (61). நேற்று முன்தினம் இவர் ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயம் சென்று விட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 14 பவுன் நகை திருடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 21, 2025
தூத்துக்குடி: இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் இப்போது வெளியிட்டுள்ளது.