News August 11, 2024
ஒடுகத்தூரில் பெய்த மழையால் சேதமான நெற்கதிர்கள்

வேலூர் மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமாகின. மேலும், ஒடுகத்தூர் அருகே உள்ள உத்திரகாவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாகவும் ,மழையின் அளவு அதிகரித்ததன் காரணமாகவும் அப்பகுதியில் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கிச்சளி சம்பார். ஐ.ஆர்59 போன்ற நெல் ரகங்கள் நீரில் மூழ்கியது.
Similar News
News November 5, 2025
வேலூர்: 3 மாத குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு

வேலூர், குடியாத்தம் தனகொண்டபல்லி கிராமத்தை சேர்ந்த வினோத்குமார், இவரது மனைவி மதுமிதா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. அதில் பிறந்து 3 மாதங்களே ஆன குழந்தைக்கு நேற்று (நவ.04) திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் குழந்தை இறந்தது தெரியவந்தது. தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 5, 2025
வேலூரில் வீடு வீடாக படிவங்களை வழங்கிய கலெக்டர்

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி நேற்று (நவ.4) பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய கானாறு தெருவில் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிகளுக்காக படிவங்கள் வழங்கும் பணியை பார்வையிட்டு, படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கினார். இதில் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், அணைக்கட்டு வட்டாட்சியர் சுகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
News November 5, 2025
வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாற்றம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த பிரேமலதா வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதிவு உயர்வு பெற்றுள்ளார். அதேபோல் வேலூர் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வந்த தயாளன் மதுரை முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் தமிழகம் முழுவதும் 37 கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


