News May 16, 2024
ஒசூரில் தார் சாலை அமைக்கும் பணி ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 40ஆவது வார்டிற்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவரும், 40வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் பார்வதி அவர்களின் கணவருமான M.நாகராஜ் அவர்கள் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Similar News
News July 7, 2025
சாலையில் பயங்கர விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் வேலம்பட்டி பகுதியிலிருந்து காவேரிப்பட்டிணம் செல்லும் சாலை இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகில் (ஜூலை-6) இரவு 8 மணி அளவில் குடிபோதையில் டாட்டா ஏசி வாகனத்தை இயக்கி வந்த இளைஞர் எதிரே வந்த இரண்டு சக்கர வாகனம் மீது மோதிய பயங்கர விபத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர்களுக்கு கை கால் முடிவு ஏற்பட்டது. விபத்து குறித்து நாகரசம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News July 6, 2025
இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜூலை. 06) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News July 6, 2025
கிருஷ்ணகிரி பெண்களுக்கான இலவச அழகு கலை பயிற்சி

இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பெண்களுக்கான இலவச அழகு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. கிருஷ்ணகிரியை சேர்ந்த பெண்கள் மட்டுமே அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி 8ம் வகுப்பு முதல் 18 வயது முதல் 45 இருக்க வேண்டும். பயிற்சியின் இறுதியில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜூலை 8க்குள் விண்ணப்பிக்கலாம். தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க