News April 14, 2025
ஒகேனக்கல் அருகே சிறுமிகள் நீரில் மூழ்கி இறப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற இரு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூருவை சேர்ந்தவர்கள் விடுமுறைக்கு ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது, பாக்கிய லட்சுமி மற்றும் காவியா இருவரும் ஆழமான பகுதிக்குள் சென்றதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது . தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சிறுமிகளின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 21, 2025
தர்மபுரி: வயிற்று வலியால் தற்கொலை!

தர்மபுரி: பஞ்சம்பள்ளி அருகே உள்ள சூடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்(55). விவசாயியான இவர் கடந்த நில ஆண்டுகளாக கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று முந்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பஞ்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 21, 2025
தர்மபுரி: விபத்தில் துடிதுடித்து பலி!

தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் நேற்று(நவ.20) மஞ்சவாடி கணவாயில் சுமார் 7:00 மணியளவில் லாரி கவிழ்ந்ததில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதை அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார், சம்பவம் இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
News November 21, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.20) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் சரவணன் , தோப்பூரில் ஜீலான்பாஷா பாஷா , மதிகோன்பாளையத்தில் இளமதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.


