News May 16, 2024
ஐ.டி.ஐ.யில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

காட்டுமன்னார்கோயில், மங்களூர், சிதம்பரம், கடலூர் மற்றும் நெய்வேலியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக ஜூன் மாதம் 7-ம் தேதி வரை மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என இன்று கடலூர் அரசு ஐ.டி.ஐ. முதல்வர் பரமசிவம் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
கடலூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு நாளை(நவ.16) அன்று நடைபெறுகிறது.இதில், கடலூர் மாவட்டத்தில் 5 மையங்களில் முற்பகலில் 509 பேரும், பிற்பகலில் 509 பேர்களும் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையத்தில் எந்த ஒரு மின்னணு சாதனத்தையும் கொண்டு வரக்கூடாது என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
News November 15, 2025
கடலூரில் இன்று மின்தடை ரத்து

கடலூர் மாவட்டத்தில் 65 தேர்வு மையங்களில் நாளை டெட் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 908 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் இன்று(நவ.15) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெட் தேர்வு காரணமாக மாவட்டம் முழுவதும் மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
News November 15, 2025
கடலூர்: வாலிபர் மீது போக்சோ வழக்கு

நத்தமேடு, செட்டிகுளத்தை சேர்தவர் சீதாராமன்(30). இவர் 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஜூன் மாதம் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இதனால் அந்த சிறுமி 4 மாதமாக கர்ப்பமானார் இது குறித்து ஊர் நல அலுவலர் அருளரசி சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சீத்தாராமன் மீது நேற்று போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


