News October 24, 2024
ஐ.டி.ஐ.யில் உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி

புனித தோமையார் மலை அருகே உள்ள பெரும்பாக்கம் ஐ.டி.ஐ.யில், கணிணி, ரோபோட்டிக், டிஜிட்டல் உற்பத்தி, மெக்கானிக் போன்ற படிப்புகளுக்கு மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இதில், 8ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள் பயிற்சியில் சேர வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 99629 86696, 75984 21700 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News July 11, 2025
மன அமைதியை கொடுக்கும் செங்கண்மாலீஸ்வரர்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூருக்கு 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது செங்கண்மால் செங்கண்மாலீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவராக செங்கண்மாலீஸ்வரர் உள்ளார். இக்கோயில் 3 ஆம் நூற்றாண்டில் முற்கால சோழப் பேரரசர் கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்டது. தினசரி வாழ்க்கையின் அழுத்தங்களில் இருந்து விடுதலை பெற்று, மன அமைதியைப் பெற இக்கோயில் ஒரு சிறந்த இடமாகும். மன அழுத்தம் உள்ள உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News July 11, 2025
குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

▶செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (ஜூலை 12) குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது.
▶தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
▶ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
▶கருப்பு மை கொண்ட பேனா மட்டுமே அனுமதி.
▶காலை 9 மணிக்குள்ளேயே தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
▶வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய கூடாது.
தேர்வு எழுதும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News July 11, 2025
JUST NOW: மாவட்டக்கல்வி அலுவலர் நியமனம்

தமிழக பள்ளிக்கல்வித்துறை 25 மாவட்டக்கல்வி அலுவலர்களை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதன்படி செங்கல்பட்டு(மதுராந்தகம்) இடைநிலை மாவட்டக்கல்வி அலுவலராக திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த கே.காளிதாஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.