News November 24, 2024
ஐயப்ப பக்தர்களுக்கு தேனி ஆட்சியர் வேண்டுகோள்

தேனி மாவட்டம், குமுளி மலைப்பாதை வழியாக பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். அவ்வப்போது மலை சாலையில் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லக்கூடிய பக்தர்கள் குமுளி மலைப்பாதையில் இரவு பயணத்தை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News December 14, 2025
தேனி: இனி அடிக்கடி வங்கிக்கு அலைய வேண்டாம்!

தேனி மக்களே, உங்க வங்கியில் Balance பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI – ஐ திறந்து பாக்க தேவை இல்லை
Indian bank : 87544 24242
SBI: 90226 90226
HDFC : 70700 22222
Axis : 7036165000
Canara Bank – 1800 1030
வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க அக்கவுண்ட் பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News December 14, 2025
தேனி: சாக்கடையில் தவறி விழுந்து ஒருவர் பலி

கொடுவிலார்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுருளி (53). இவருக்கு ரத்தக்கொதிப்பு நோய் இருந்து வந்த நிலையில் அதன் காரணமாக சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் நடந்து சென்ற பொழுது அங்கிருந்த சாக்கடையில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று (டிச.13) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.
News December 14, 2025
தேனி மக்களே.. மின் புகார்களுக்கு இனி Whatsapp மூலம் தீர்வு

தேனி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து இனி மின்வாரியத்திடம் ‘Whatsapp’ மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். அதன்படி 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் வாட்ஸ்ஆப் மூலமாக போட்டோவுடன் புகாரளிக்கலாம். இத்தகவலை மறக்காமல் SHARE பண்ணுங்க!


