News November 23, 2024
ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

குன்றத்தூர் ஒன்றியம் ஐயப்பன்தாங்கல் ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைசெல்வி மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் க.ஆர்த்தி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன், குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், திருபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன் பங்கேற்றனர்.
Similar News
News August 11, 2025
காஞ்சிபுரத்தில் முதல் மனைவி கொடூர கொலை!

வாலாஜாபாத்தை சேர்ந்த மதன் தனது 2ஆவது மனைவி சுகன்யா உடன் வாழ்ந்து வந்தார். அண்மையில், முதல் மனைவி லைலா குமாரி உடன் மீண்டும் பழக்கம் ஏற்பட்டு, அவ்வப்போது சந்தித்து பேசி வந்துள்ளார். இதனால் மதன் – சுகன்யா இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. லைலா குமாரி தன்னை வசியம் செய்ததாக நினைத்து, அவரை வனப்பகுதிக்கு வரவழைத்து கொலை செய்துள்ளார். பின்னர், போலீசார் விசாரணையில் உண்மைகள் வெளிவர, சரணடைந்தார்.
News August 11, 2025
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மழை அலர்ட்

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் 16ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஆக.11) பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காஞ்சிபுரம் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். மேலும், SHARE பண்ணுங்க.
News August 11, 2025
காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (10.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.