News August 2, 2024
ஐடிஐ நேரடி சேர்க்கை தேதி நீட்டிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, நாகலாபுரம், திருச்செந்தூர், வேப்பலோடை ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் இணையதள வாயிலான சேர்க்கை முடிவடைந்துள்ளது. தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நேரடி சேர்க்கை தேதி வரும் 16ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
கோவில்பட்டி: கிணற்றில் பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் கரையடி கிணறு ஒன்று உள்ளது. இங்கு தெற்கு தெருவை சேர்ந்த நடராஜன் மனைவி காந்திமதி (48) என்பவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டார். மேலும் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என கயத்தாறு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 4, 2025
தூத்துக்குடி மக்களே இந்த தேதியை NOTE பண்ணுங்க

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் ஆகியவை இணைந்து மாதம் தோறும் சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் நவ. 7 அன்று கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
தூத்துக்குடி: டிகிரி தகுதி.. 5,810 ரயில்வே காலியிடங்கள்

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் <


