News April 26, 2025
ஏழையையும் குபேரனாக்கும் ராகு தளத்திற்கு இன்று சென்று வாருங்கள்

திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் ராகு பகவான் நாகவல்லி, நாககன்னி என இரு மனைவிகளுடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார். இவரது திருமேனியில் பாலாபிஷேகம் செய்யும்போது அந்தப் பால் நீல நிறமாக மாறும் அதிசயம் நடைபெறுகிறது. ராகு பகவான் இன்று மாலை 4:20 மணிக்கு கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு திருமண தடை நீங்கி ராகு தோஷ நிவர்த்தி பெறுங்கள். Share It Now
Similar News
News December 5, 2025
தஞ்சை: பல கோடி ரூபாய் மோசடி

தஞ்சாவூரில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி பல பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், தலைமறைவாக இருந்த நிறுவனத்தின் உரிமையாளர் மர்ஜித் அலி(44), ஹவா பீவி(40) ஆகியோரை கைது செய்தனர்.
News December 5, 2025
தஞ்சை மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒக்கநாடு கீழையூர், வீரராசம்பேட்டை மற்றும் முள்ளுக்குடி துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணிமுதல் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. மேலும் நாளை (டிச. 5) மாரியம்மன் கோயில், திருப்பிறம்பியம், பாபநாசம், திருப்பனந்தாள் ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பனி காரணமாக காலை காலை 9 – 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது
News December 5, 2025
தஞ்சை கலெக்டர் தகவல்!

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், 2025-26 ஆம் ஆண்டு 1 லட்சத்து 97 ஆயிரத்து 100 ஏக்கரில் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜன் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது 3 லட்சத்து 26 ஆயிரத்து 95 ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


