News October 24, 2024
ஏழைகள் சாமி கும்பிட கூடாதா என உயர் நீதிமன்றம் கேள்வி

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி கட்டணம் வசூலிப்பதற்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கோயிலில் சாமி தரிசனத்துக்கு ரூ.1,000, 2,000 வாங்கினால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்?.ஏழைகள் சாமி கும்பிடக்கூடாதா? பணக்காரர்களுக்கு மட்டும்தான் கோயிலா? என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தூத்துக்குடி ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
Similar News
News November 22, 2025
தூத்துக்குடி: PF-ல் சந்தேகமா? முகாம் தேதி அறிவிப்பு

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்லூரி வளாகத்தில் வருகிற 27ஆம் தேதி வியாழன் காலை 9 மணிக்கு வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ சார்ந்த உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தினர், தொழில் நிறுவன அமைப்புகள் பங்கேற்று பயனடையலாம் என ஆணையர் சிவ சண்முகம் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
தூத்துக்குடியில் மரணம் வரை ஆயுள் தண்டனை

சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனை கடந்த 2024-ம் ஆண்டு வேம்பாரை சேர்ந்த தாமஸ் அற்புத ரகசியம் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார். இது சம்பந்தமான வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தாமஸ் அற்புத ரகசியத்திற்கு இயற்கை மரணம் வரை ஆயுள் தண்டனை விரித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News November 21, 2025
தூத்துக்குடியில் உலக மீனவர் தின விழா

தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் இன்று உலக மீனவர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துகொண்டு திமுக அரசு மீனவர்களுக்கு செய்துள்ள திட்டங்களை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


