News April 21, 2025
ஏரியில் குளிக்கச் சென்றன் மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்

திருப்பத்தூரை சேர்ந்த ஆர்யா (12) என்ற மாணவர் பெங்களூருவில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், நண்பர்களுடன் பெரியவெங்காயப்பள்ளி பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஏரியில் குளித்துக் கொண்டிருந்த ஆர்யா, திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News December 13, 2025
திருப்பத்தூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News December 13, 2025
திருப்பத்தூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

திருப்பத்தூர் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 13, 2025
ஆம்பூர்: மினி லாரி மீது சொகுசு பஸ் மோதி விபத்து

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (டிச-13) அதிகாலை விபத்து ஏற்பட்டது. சென்னையிலிருந்து கோயம்புத்தூர் சென்ற டாடா ஏஸ் மினி லாரி மீது, சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற சொகுசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில், லாரி ஓட்டுநரான நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த செந்தில்குமார் (38) படுகாயம் அடைந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


