News April 5, 2024
ஏப்.15 முதல் மீன்பிடி தடை காலம்
கடலில் மீன்வளத்தை பெருக்க ஆண்டுதோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. மீன்களின் இனப்பெருக்க காலத்தை ஒட்டி ஏப்.15 நள்ளிரவு முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை என 61 நாட்களுக்கு மீன் பிடிக்க மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு உதவுவதாக புதுப்பட்டினம், வாயலுார், உய்யாலிகுப்பம், கடலுார் உள்ளிட்ட அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
Similar News
News November 20, 2024
சிட்கோ தொழிற்பேட்டையில் ஊழியர்கள் போராட்டம்
ஆலத்தூரில் சிட்கோ தொழிற்பேட்டையில் 30க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்துகள், மாத்திரைகள், ஊசிகள், குளுக்கோஸ் போன்றவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு பலமுறை நிர்வாகத் திட்டம் கோரிக்கை வைத்தும் அவர்கள் ஏற்கவில்லை. இதனால், நேற்று காலை முதல் 40க்கும் மேற்பட்டோர் பணியை புறக்கணித்து தொழிற்சாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News November 20, 2024
கடலோர பாதுகாப்பு ஒத்திகை விழிப்புணர்வு பயிற்சி
கடலோர பாதுகாப்பு ஒத்திகை விழிப்புணர்வு பயிற்சி 20.11.2024 மற்றும் 21.11.2024 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் கல்பாக்கம் அணுமின் நிலையம் (IGCAR) வளாகத்தில் நடைபெற உள்ளது. எனவே, மேற்படி பகுதியில் வசித்துவரும் பொதுமக்கள் இது ஒத்திகை பயிற்சி என்பதால் இதுகுறித்து எவரும் பதற்றம் அடையவோ மற்றும் அச்சம் கொள்ளவோ வேண்டாம் என்று ஆட்சியர் அருண்ராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
News November 19, 2024
பினாங்கிற்கு சென்னையில் இருந்து விமான சேவை
பினாங்கிற்கு, சென்னையில் இருந்து நேரடி தினசரி விமான சேவை, வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது. தமிழர்கள் பெருமளவு வசிக்கும் பினாங்கிற்கு, விமான சேவை தொடங்க வேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்த விமான சேவை தொடங்கப்படுகிறது.