News April 10, 2025
ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்: கலெக்டர் தகவல்

தமிழக கிழக்கு கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலம், மீன்வளத்தை பாதுகாக்க ஏப்.15 முதல் ஜூன்.14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள், இழுவைப் படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இதன்படி ராமநாதபுரம் விசைப்படகுகள், இழுவைப் படகு மீனவர்கள் ஏப்.15- ஜூன் 14 வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
ராம்நாடு: காதல் விவகாரம்.. 2 பேருக்கு வெட்டு

திருவாடானை கல்லூரியில் பயிலும் 17 வயது மாணவியை அதே கல்லூரியில் பயிலும் தொண்டி மாணவரும், மானாமதுரை வாலிபரும் காதலித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே மானாமதுரையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் ஏற்பட்ட தகராறில் தொண்டி சத்யபிரசாத் (26), நம்புதாளை முகமது ரிஸ்வான் மீது வாள், கத்தியால் வெட்டு விழுந்துள்ளது. இதில் மானாமதுரையை சேர்ந்த கவிபாண்டி (24) என்பவரை தொண்டி போலீசார் கைது செய்தனர்
News November 8, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து காவல்துறை

இன்று (நவ. 7) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News November 7, 2025
ராம்நாடு: கொலை குற்றவாளிகள் இருவர் மீது குண்டர் சட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை கொலை செய்த அதே பகுதியைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன் மற்றும் கோகுல நாத் ஆகிய இருவர் மீதும் பரமக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர்கள் மீது காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் அடைக்க ராமநாதபுரம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


