News April 7, 2025

ஏப்., 12ல் அரக்கோணத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

அரக்கோணத்தில் அபிஷேக் அரசு மருத்துவமனை எதிரே வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜே.யு. சந்திரகலா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ராணிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார மாவட்டத்தில் படித்து ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள், செவிலியர்கள், கலைக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு ஏப்.12ம் தேதி காலை 8.30 மணி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Similar News

News April 8, 2025

குடும்ப பிரச்சனையால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

image

மேல்புலம் கிராமம் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (55). நேற்று (ஏப்ரல்.07) குடும்ப பிரச்னை காரணமாக தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கலவை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் முனியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். (தற்கொலை எதற்கும் தீர்வல்ல) 

News April 8, 2025

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஆட்சியர் அறிவிப்பு

image

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் காசோலை, பாராட்டு சான்றிதழ், பதக்கம் வழங்கப்படும். தகுதியானவர்கள் www.sdat.tn.gov.in ல் மே 9 ம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 8, 2025

நகை கடையில் செயின் திருடிய பெண் கைது

image

நெமிலி பஜார் பகுதியை சேர்ந்தவர் சுசில்குமார். இவர் அதே பகுதியில் நகை மற்றும் அடகு கடை வைத்துள்ளார். கடந்த மாதம் 23ஆம் தேதி சுசில்குமாரின் கடைக்கு வந்த பெண் ஒருவர், நகை வாங்குவது போன்று ஒன்றை சவரன் செயினை திருடி சென்றார். நெமிலி போலீசார் இதனை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், திருவள்ளூரை சேர்ந்த ரஹானா என்பவர் நகையை  திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து நேற்று அவரை கைது போலீசார் செய்தனர்.

error: Content is protected !!