News March 29, 2024
ஏப்ரல்.6 இல் குதிரை பந்தயம்

உதகையில் சீசனை முன்னிட்டு மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் 137 ஆவது ஆண்டு குதிரை பந்தயம் ஏப்ரல் 6 தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 6 , 7 ,13 , 14 , 20 ,21 , 27 ,28 , மே 4 , 5 ,11 , 12 , 18 , 19 ,25 ,26 ,ஜூன் 2 ஆகிய தேதிகளில் மொத்தம் 17 நாட்கள் குதிரை பந்தயங்கள் நடைபெறும். இதில் சென்னை , பெங்களூரூ , மும்பை உள்பட பல இடங்களில் இருந்து 500 குதிரைகள், 35 ஜாக்கிகள்,
24 குதிரை பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.
Similar News
News September 16, 2025
நீலகிரி ஆட்சியர் அதிரடி நடவடிக்கை!

நீலகிரி மாவட்டம், சீகூர் பள்ளத்தாக்கில், மாயார், சோலுார் உள்ளிட்ட பகுதிகள் யானை வழித்தடமாக உள்ளன. சீகூர் யானை வழித்தடத்தில் சீல் வைக்கப்பட்ட விடுதிகளை, இடித்து அகற்ற தற்போது, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ”யானைகள் வழித்தடத்தில் உள்ள, 39 தங்கும் விடுதிகளை விரைவில், இடிக்கபடும். யானைகள் வழித்தடம் குறித்து, டிஜிட்டல் வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
News September 16, 2025
நீலகிரி: காவல் அதிகாரிகளின் இரவு ரோந்து பணி விபரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
News September 15, 2025
நீலகிரியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

நீலகிரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இரண்டாம் கட்டமாக மாவட்டத்தில் உள்ள ஆறு தாலுகாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை ஊட்டி நகராட்சி பகுதிகளுக்கு சீனிவாசா திருமண மண்டபத்திலும், நெல்லியாலாம் பகுதி பாண்டியர் குடோன் பகுதியிலும், உள்ளத்தி பகுதிகளுக்கு உள்ளத்தில் சமுதாயக் கூட்டத்திலும், நிலக்கோட்டை பகுதிகளுக்கு பாட்டவயல் எம்வி சன்ஸ் கட்டிடத்திலும் நடைபெறுகிறது.