News April 2, 2025
எஸ்.பி பதவி ஏற்றதில் இருந்து 106 பதிவேடு குற்றவாளிகள் கைது

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ ராகரத்தினம் பதவியேற்றது முதல் 106 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். மேலும் 15 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திருச்சி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பேணிகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 27, 2025
BREAKING திருச்சி: மிக கனமழை எச்சரிக்கை

இலங்கை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வரும் காரணத்தால் திருச்சி மாவட்டத்தில் நாளை (நவ.28) மிக கனமழை கொட்டித் தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. SHARE NOW!
News November 27, 2025
திருச்சி: அரசு ஊழியர் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News November 27, 2025
திருச்சி மாவட்டத்தில் தேடுதல் வேட்டை – எஸ்.பி

திருச்சி மாவட்டம் முழுவதும் நேற்றுமுன்தினம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதில், ராம்ஜி நகர் பகுதியில் ரூ.34,500 மதிப்புள்ள புகையிலை, திருவெறும்பூரில் ரூ.40,000 மதிப்புள்ள புகையிலை, துவரங்குறிச்சி பகுதியில் ரூ.30,000 மதிப்புள்ள புகையிலை, துவாக்குடி பகுதியில் ரூ.5570 மதிப்புள்ள புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி எஸ்.பி செல்வநகரத்தினம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.


