News December 4, 2024

எஸ்.பி. தலைமையிலான குற்ற ஆய்வுக் கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட அனைத்து காவல் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பணி தொடர்பான மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மொத்தம் 38 நபர்களை (04.12.2024) இன்று நேரடியாக வரவழைத்து பாராட்டினார்.

Similar News

News November 13, 2025

புதுகை: ஆவுடையார்கோவிலில் வண்டல் மண் கடத்தல்

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே, நேற்று மணிகண்டன் (32) என்பவர் டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆவுடையார்கோவில் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிந்து, மேலும் அவரிடம் இருந்து ஒரு யூனிட் வண்டல் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 13, 2025

புதுக்கோட்டை: மரம் சாய்ந்து வீடு சேதம்!

image

புதுக்கோட்டையில் நேற்று (நவ.12) பகல் 12 மணி அளவில் மழை பெய்ய தொடங்கி, பல்வேறு இடங்களில் பரவலாக பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை பெய்த இந்த மழையின் போது பலத்த காற்றும் வீசியது. புது அரண்மனை வீதியில் ஒரு குடிசை வீட்டின் மீது வேப்பமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் வீட்டின் சுற்றுச்சுவர் சேதமடைந்தது. மேலும் நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News November 13, 2025

புதுக்கோட்டை: மது போதையில் வாலிபர் தற்கொலை

image

புதுக்கோட்டை, காந்திநகர் ஆறாம் வீதியை சேர்ந்தவர் விவேக் (30). இவர் அவரது வாழ்க்கை மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக மது போதையில் நேற்று காந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி ஜோதி (24) அளித்த புகாரின் பேரில் கணேஷ் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!