News April 24, 2025
எஸ்.எஸ்.கோட்டையில் ஆசிரியருக்கு ரூ.2 இலட்சம் அபராதம்

எஸ்.எஸ் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்த 7ம் வகுப்பு மாணவியை 400 முறை தோப்புக் கரணம் போடச் செய்த அரசுப்பள்ளி ஆசிரியை சித்ராவுக்கு ரூ.2 இலட்சம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் தாயார் தொடர்ந்த வழக்கில், அபராத தொகையை ஆசிரியை சித்ராவிடம் இருந்து வசூலிக்கவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், தமிழக முதலமைச்சரால் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு, அவ்வையார் விருது வழங்கப்படவுள்ளது. தகுதிகளுடைய சமூக சேவை புரிந்த பெண்கள் வருகின்ற 31.12.2025 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.
News December 3, 2025
சிவகங்கை: SBI வங்கியில் வேலை ரெடி., தேர்வு இல்லை..!

சிவகங்கை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <
News December 3, 2025
திறன் மேம்பாட்டு பயிற்சி ஆட்சியர் அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்காக திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சிகள் தாட்கோ சார்பில் நடைபெறும் விண்ணப்பிக்க www.tahdco.com இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்யலாம். 18–23 வயது, +12 / பட்டப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி கலாம் 6 மாதம் பயிற்சி கட்டணம் + விடுதி வசதி தாட்கோ வழங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


