News August 14, 2024
எஸ்எம்எஸ் பார்த்து ஏமாறாதீர்கள் – அலர்ட்

திருச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கற்பகசெல்வி கூறுகையில், மின் நுகர்வோரின் கைப்பேசி எண்ணுக்கு மின் கட்டண பாக்கி தொடர்பாக அனுப்பப்படும் குறுஞ் செய்திக்கு கீழ் TANGEDCO வங்கி கணக்கு எண் மட்டுமே அனுப்பப்படும். தனிநபரின் வங்கி கணக்கு எண்ணோ அல்லது செல்போன் நம்பரோ அனுப்புவது நடைமுறையில் இல்லை. இதுபோன்ற போலியான எஸ்.எம்.எஸ்.தகவல்களை பார்த்து நுகர்வோர்கள் பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
JUST IN திருச்சி : 5810 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 21, 2025
திருச்சி: ஐஏஎஸ் அதிகாரி தந்தை வீட்டில் திருட்டு

தமிழக ஜவுளித்துறை இயக்குநரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி லலிதா. இவரது தந்தை ராஜேந்திரன் (70) திருச்சி, லாவண்யா கார்டன் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரன் சில நாட்களுக்கு முன், தன் வீட்டை பூட்டி விட்டு, சென்னையில் உள்ள மகள் லலிதா வீட்டுக்கு சென்றார். இதையறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ.80,000 ரொக்கம், 2 கிலோ வெள்ளி மற்றும் தங்க நகைகள் திருடி சென்றனர்.
News October 21, 2025
திருச்சி: மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

திருச்சி மாவட்டம், துவாக்குடியைச் சேர்ந்தவர் ஜெயந்த் பிரவீன் ராஜ் (29). குபேரன் நகர் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்த இவர் நேற்று (அக்.19) வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் பிரவீன் ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.