News September 14, 2024
எழும்பூரில் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் போராட்டம்

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்ட பாதுகாப்பு சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு தனியாக அமைச்சரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 1, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் நேற்று (30.11.2025) இரவு 11.00 மணி முதல் இன்று (டிச.01) காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News November 30, 2025
சென்னையில் ராமதாஸ் போராட்டம் அறிவிப்பு!

அன்புமணி தான் பாமக தலைவர் எனத் தெரிவித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்தும், நீதி கேட்டும் வரும் டிச. 2-ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் டிச 4-ம் தேதி டெல்லியிலும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
News November 30, 2025
சென்னை: ‘காமுக’ முதியவருக்கு காப்பு

தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் அண்ணாநகரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது முதியவர் ஒருவர் முத்தம் கொடுப்பது உட்பட பல்வேறு விதமாக சைகை செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பெயரில் திருமங்கலம் போலீசார், திருவொற்றியூரைச் சேர்ந்த கணேசன் (64) என்பவரை, நேற்று கைது செய்தனர்.


