News February 17, 2025
எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.<
Similar News
News November 28, 2025
வேலூர்: 9 பேர் பதவி உயர்வு.. டிஐஜி உத்தரவிட்டார்!

காவல் உதவி ஆய்வாளர்களாக 10 வருடத்துக்கு மேலாக பணியாற்றிய 9 பேர், பதவி உயர்வுடன் வேலூர் சரகத்தின் பல காவல் நிலையங்களுக்கு நியமிக்கப்பட்டனர். டிஜிபி வெங்கட்ராமனின் உத்தரவு அடிப்படையில், டிஐஜி தர்மராஜன் நியமனத்தை அறிவித்தார். காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த அதிகாரிகள் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
News November 28, 2025
வேலூர்: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து வேலூர் மாவட்டம், காட்பாடி கன்ட்ரோல்மென்ட் மற்றும் திருவண்ணாமலை வழியாக ராமேஸ்வரத்திற்கு வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரயில் (டிசம்பர் 2,3,9,10,11) தேதிகளில் சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த வாராந்திர சிறப்பு இரயில் (06080) கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் ஆன்மீக பக்தர்கள் வசதிக்காக இந்த இரயில் இயக்கப்படுவதாக இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 28, 2025
வேலூர் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

வேலூர் கொணவட்டத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் தனியார் மருத்துவமனை ஊழியர். இவரது பைக் கடந்த 19-ம் தேதி தனது வீட்டின் அருகே நிறுத்தியிந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் பைக் திருடிய ஸ்ரீகாந்த் (22), ஜெய்கணேஷ் (22) பிரகாஷ் (18) 3 பேரை கைது செய்தனர். மேலும் 9 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.


