News February 17, 2025
எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <
Similar News
News November 16, 2025
ரோந்து பணியில் உள்ள காவலர்களின் பெயர்களும் விவரங்களும்

இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள். திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரின் ஆணைக்கிணங்க இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் கீழே வெளியிடப்பட்டுள்ளது ரோந்து பணியானது இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறுகிறது பொதுமக்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால் உடனடியாக கீழே உள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்
News November 15, 2025
திருப்பத்தூர்: தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் பலி!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரெயில் நிலையத்திற்கும் பச்சகுப்பம் ரெயில் நிலையத்திற்கும் இடையே இன்று (நவ.15) சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு ரெயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
News November 15, 2025
கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் நெகிழ்ச்சி

(நவ.15) வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பீம குளம்ஊராட்சியில் மந்தார குட்டை கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லிகலந்து கொண்டு கூட்டத்திற்கு வந்த ஒரு தாயிடம் இருந்த இரண்டு குழந்தைகளை குழந்தையை தாய் அரவணைப்பது போல் போல் மாவட்ட ஆட்சியர் தன் மடியில் அமர வைத்தது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்பட்டது. ஆட்சியரின் செயல் அனைவரையும் கவனத்தை ஈர்த்தது.


