News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News February 22, 2025

காஞ்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்

image

காஞ்சி மாநகராட்சிக்குட்பட்ட நத்தப்பேட்டை பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இன்று (22.02.2025) காலை 8 மணிக்கு நெகிழி கழிவு சேகரிப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். துணை ஆட்சியர் ஆஷிப் அலி, மாநகராட்சி ஆணையர் நவேந்திரன், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக் குப்பை நெகிழி சுத்தப்படுத்தினர்.

News February 22, 2025

தீவிரமாகும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்

image

பணி நீக்கத்தைக் கண்டித்து தொழிலாளர்கள் ஆலை வளாகத்திலேயே கடந்த 16 நாள்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் சாம்சங் தொழிற்சாலையில் 14 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரம் வெள்ளகேட் பகுதியில் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

News February 21, 2025

நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் விலகல்

image

நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயலாளராக 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ராயப்பன் இன்று (பிப்.,21) நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.  மேலும், அறிக்கையில், கட்சியில் இருந்து நிரந்தரமாக விலகுவதாகவும், இதுவரை உடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!