News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

Similar News

News January 2, 2026

பொங்கலுக்கு தயரான நெற்பயிர்கள்!

image

சின்னசேலம் வட்டாரத்துக்குட்பட்ட பகுதியில் கோமுகி அணை, ஏரி பாசனம், கிணற்றுப் பாசனம் மூலம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தப் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். மேலும் தற்போது புது நெல்லை அறுவடை செய்து பொங்கல் வைப்பதற்கு பெரும்பாலான வயல்களில் தயார் நிலையில் நெல் விளைச்சல் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News January 2, 2026

கள்ளக்குறிச்சியில் மர்ம வேன் – மக்கள் பீதி!

image

சின்னசேலம் கூகையூர்ரோடு அருகே ஆம்னி வாகனம் ஒன்று கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆம்னி வேன் யாருடையது? எதற்காக இங்கே நிற்கிறது? என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை. இந்த வாகனத்தை சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்து, வாகனத்தின் உள்ளே என்ன இருக்கிறது என்று ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் அச்சத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News January 2, 2026

கள்ளக்குறிச்சியில் மூதாட்டி அடித்து கொலை!

image

சின்னசேலம் அருகே வசித்து வரும் கன்னியம்மாளுக்கும் (70), அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (60) மனைவி வள்ளிக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட வாய்தகராறில், ராஜேந்திரன் ஊதாங்குழலால் கன்னியம்மாளை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!