News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்!

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில்(BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லர், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்.

Similar News

News January 10, 2026

தூத்துக்குடி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

தூத்துக்குடி மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த சில நிமிடங்களில் தங்கள் இடத்திற்கு லைன்மேன் வந்து புகாரை சரி செய்வார். SHARE பண்ணுங்க

News January 10, 2026

தூத்துக்குடி: இளம் பெண் மீது சரமாரி தாக்குதல்

image

தூத்துக்குடி மந்தி தோப்பு துரைசிங்க நகரை சேர்ந்தவர் சரண்யா (25). இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஆறுமுகம் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆறுமுகம், சரண்யாவை அவதூறாக பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் ஆறுமுகத்தை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 10, 2026

தூத்துக்குடி: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

தூத்துக்குடி மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து (ஜன.11) நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள வேலைவாய்ப்பு தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!