News February 17, 2025
எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <
Similar News
News November 28, 2025
அரியலூர்: அவசர உதவி எண்கள்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அரியலூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழை / புயலால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மையம் 1070, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் 1077 அழைத்தால் போதும், உடனடியாக உதவி அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
அரியலூர்: பணியை புறக்கணித்த வழக்கறிஞர்கள்

அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இன்று நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர். இதில் இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல், அதனைக் கொண்டு வருவதை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. மேலும் வழக்கறிஞர்கள் பணி பாதுகாப்பு சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
அரியலூர்: மகன் மற்றும் தாய்க்கு சிறை தண்டனை

அரியலூர் அழகப்பா நகரைச் சேர்ந்த செந்தில்குமார், அவரது தாய் கண்ணகி ஆகியோர் தங்களது வீட்டை விற்பதாக கோரி ஆசிரியர் ஜெயாவிற்கு 43.30 இலட்சம் பெற்றுக் கொண்டு, கிரையம் எழுதி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து ஜெயா அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் செந்தில்குமார் கண்ணகி ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு.


