News February 17, 2025
எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <
Similar News
News November 15, 2025
66.90 அடியாக குறைந்த வைகை அணையின் நீர்மட்டம்

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து முதல் போக மற்றும் ஒருபோக பாசனம், மதுரை மாவட்ட தேவை மற்றும் குடிநீருக்காக என அணையில் இருந்து வினாடிக்கு 2299 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் நீர் வரத்து 1402 கனஅடியாக உள்ளது. நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து இன்று (நவ.15) 66.90 அடியாக குறைந்து காணப்படுகிறது.
News November 15, 2025
தேனி: மத்திய அரசு பள்ளியில் வேலை ரெடி.. APPLY NOW

தேனி மக்களே, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள 14,967 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, 12th, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிபடையில் தேர்வு செய்யப்படும். மேலும் விவரம் அறிய & விண்ணப்பிக்க <
News November 15, 2025
தேனி: ஆசிரியருக்கு கத்திக்குத்து.. ஒருவர் கைது

காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த முத்துராஜா (40) சுருளிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவருக்கும் அதே பகுதி ராமகிருஷ்ணன் என்பவருக்கும் தோட்டம் பாதை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று (நவ. 14) முத்துராஜா பள்ளி அருகே உள்ள டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த ராமகிருஷ்ணன் கத்தியால் முத்துராஜாவை முதுகில் குத்தி உள்ளார். போலீசார் ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.


