News February 17, 2025
எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <
Similar News
News December 13, 2025
பரமக்குடி: முதியவர்களை கொன்ற குற்றவாளிக்கு குண்டாஸ்

பரமக்குடி எமனேஸ்வரம் பகுதி வளையனேந்தல் கிராமம் வைகை ஆற்றுப்படுகையில் வேலுச்சாமி, லட்சுமணன் ஆகிய முதியவர்கள் மது அருந்தியதை கண்டித்த தகராறில் நவ., 17ல் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதில் அலெக்ஸ்பாண்டி 26, நவ.,18ல் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்ததால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
News December 13, 2025
ராமநாதபுரம்: சிறுவனுக்கு பாலியில் தொல்லை: 20 ஆண்டு சிறை

முதுகுளத்துார் அருகே பெரியஇலை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகையா 41. விவசாய கூலி வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவனுக்கு 2020 ஏப்.,30ல் அப்பகுதியில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுவன் தந்தை போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் நேற்று முருகையாவுக்கு 20 ஆண்டுகள் சிறை, ரூ.5000 அபராதம், மிரட்டல் வழக்கில் ஓராண்டு சிறை, ரூ.1000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
News December 13, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (டிச.12) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.


