News September 14, 2024
எல்பிஜி டேங்க் லாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக் வாபஸ்

நாமக்கல் சேலம் சாலையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எல்பிஜி டேங்க் லாரி உரிமையாளர் சங்க நிறுவனம் உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கேஸ் டேங்கர் லாரிக்கு நிலுவைத் தொகை வழங்காத ஆயில் நிறுவனத்தை கண்டித்து கடந்த மூன்று நாட்களாக lpg டேங்க் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இதை அடுத்து ஆயில் நிறுவனங்கள் நிலுவை தொகை தருவதாக ஒப்புக்கொண்டதால் எல்பிஜி டேங்க் லாரிகள் ஸ்ட்ரைகை வாபஸ் பெற்றனர்.
Similar News
News January 3, 2026
நாமக்கல்லில் குடிபோதையில் விபரீதம்!

நாமக்கல்: வெண்ணந்தூர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சரோஜா. இவரின் மகன் சண்முகம் (46). இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக தனித்தனியே வசித்து வருகின்றனர். சண்முகம் தாய் சரோஜா வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், மனமுடைந்த சண்முகம் மதுபோதையில் விட்டத்தில் நைலான் கயிற்றை மாட்டி கடப்பாக்கல்லில் ஏறி நின்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News January 3, 2026
நாமக்கல்: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்!
News January 3, 2026
நாமக்கல்: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை

நாமக்கல் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <


