News October 24, 2024
எலி பேஸ்ட் சாப்பிட்ட மாணவியால் பரபரப்பு

சிறுகனூர் அருகே நெய்க்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த தர்மராஜ் மகள் தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு பணம் கட்ட வேண்டும் என மாணவி தந்தையிடம் கேட்டு தராததால், எலி பேஸ்ட் சாப்பிட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுகனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News November 8, 2025
திருச்சி: லைசென்ஸ் தொலைந்து விட்டதா ?

திருச்சி மக்களே, உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்தாலோ கவலை வேண்டாம்.. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து டூப்ளிகேட் லைசன்ஸ் பெறலாம். அதற்கு <
News November 8, 2025
திருச்சி: முன்னாள் வட்டாட்சியரை கொலை – 3 பேர் கைது

திருச்சி தாயனூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக முன்னாள் வட்டாட்சியர் சுப்பிரமணி என்பவர், நேற்று முன்தினம் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை செய்த மூன்று பேர் தலைமறைவாகினர். இது தொடர்பாக சோமரசம்பேட்டை போலீசார் விசாரித்து வந்த நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் பதுங்கி இருந்த அசோக்குமார், தமிழரசன் மற்றும் சூர்யா ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
News November 8, 2025
திருச்சி: மாட்டுக் கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் மானியம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. (<<18233187>>பாகம்<<>>-2)


