News April 27, 2025
எர்ணாகுளம்- ஹாட்டியா ரயிலில் கூடுதலாக 2 ஏசி பெட்டி இணைப்பு!

கோவை, ஈரோடு, சேலம் வழியே இயக்கப்படும் எர்ணாகுளம்- ஹாட்டியா
எக்ஸ்பிரஸ் ரயில்கள் (22837/22838) வரும் ஏப்ரல் 28- ஆம் தேதி முதல் கூடுதலாக எக்னாமி ஏசி பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இனிமேல் இந்த ரயில் 19 மூன்றடுக்கு எக்னாமி ஏசி பெட்டிகள், 1 பேன்ட்ரி கார், 2 லக்கேஜ் மற்றும் பிரேக் வேன் பெட்டிகள் என 22 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 21, 2025
சேலம்: செல்போன் பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்!

சேலம், பூலாம்பட்டியை அடுத்த பில்லுக்குறிச்சி காலனி பகுதியைச் சேர்ந்த 17 வயது விஷ்ணு, பிளஸ்-2 முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இரவு, பகல் பாராமல் செல்போனை பார்த்துக் கொண்டிருந்த அவரை அவரது தந்தை கண்டித்துள்ளார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ்ணு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News November 21, 2025
பி.எஸ்.என்.எல். சேவை மைய உரிமம் பெற அழைப்பு!

சேலம் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை, மேட்டூர் ஆர்.எஸ். மற்றும் திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மைய உரிமம் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கூடுதல் விவரங்களுக்கு சேலம் விற்பனை பிரிவு உதவி பொது மேலாளரை 0427-2311414 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.