News January 2, 2025
எரவாஞ்சேரி: விஷப் பூச்சி கடித்து சிறுமி உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், சிமிழி பகுதியைச் சேர்ந்தவர் ராதா. இவரது மகள் கவிஸ்ரீ (13). பள்ளி விடுமுறை காரணமாக எரவாஞ்சேரியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு கவிஸ்ரீ சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது, விஷப் பூச்சி கடித்ததில் மயங்கிய சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து எரவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 17, 2025
திருவாரூர் மாவட்ட ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் எண்கள் தரப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என திருவாரூர் மாவட்ட காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 16, 2025
பயிர் காப்பீடு தேதி நீட்டிப்பு ஆட்சியர் விளக்கம்

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா தாளடி பயிர் காப்பீடு தேதி வருகின்ற நவம்பர் 30 வரை செய்யலாம் என நீட்டிக்கப்பட்டுள்ளது. அது குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள குறிப்பில் 27 மாவட்டங்களில் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய மழை மற்றும் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட காரணங்களால் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சி தலைவர் மோகனசுந்தரம் அறிவித்துள்ளார்.
News November 16, 2025
திருவாரூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

இந்திய ஸ்டீல் ஆணையத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.50,000 – 1,60,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 05.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அனைவருக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


