News August 15, 2024
எம்.பி. ஜோதிமணியின் சுற்றுப்பயண விவரம் வெளியீடு

கரூர் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியத்தில் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். தொடர்ந்து இன்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வருகின்ற 16ஆம் தேதி அன்னவாசல் ஒன்றியத்தில் எம்.பி. ஜோதிமணி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.
Similar News
News September 16, 2025
புதுக்கோட்டை கலெக்டர் கொடுத்த அப்டேட் !

புதுகை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வரும் (செப்.,19) காலை 10:30 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள், மற்றும் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மு.அருணா அழைப்பு விடுத்துள்ளார். உங்கள் பகுதி விவசாயிகளுக்கும் SHARE பண்ணுங்க!
News September 16, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,15) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 15, 2025
புதுக்கோட்டை: கண் பிரச்னைகளை தீர்க்கும் கோயில்

புதுக்கோட்டை மாவட்டம் கிரனூர் அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், பெருமாளுக்கு அமாவாசை அல்லது சனிக்கிழமை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி அர்ச்சனை செய்தால் கண் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. இத்தகவலை SHARE பண்ணுங்க.