News August 14, 2024

எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் கே.சி வீரமணி திடீர் சந்திப்பு

image

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற தொழிலதிபர் இல்ல திருமண விழாவில் திமுக எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் அதிமுகவின் முன்னாள் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி வீரமணி ஆகிய இருவரும் தனி அறையில் சுமார் ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தை நடையுள்ளனர். மேலும் இருவரும் கைகுலுக்கி ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News December 17, 2025

திருப்பத்தூர்: சாலையை கடக்க முயன்ற சிறுமி மீது மோதிய பைக்!

image

ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரது மகள் ஜோஷகா (8) என்பவர் சந்தைக்கோடியூர் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது டூவீலரில் திருப்பத்தூர் பகுதியில் இருந்து வாணியம்பாடியை நோக்கி சென்ற போது, சிறுமி மீது மோதியதில் படுகாயம் அடைந்தார். இந்நிலையில், அங்கிருந்தவர்கள் சிறுமியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

News December 16, 2025

திருப்பத்தூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (டிச.16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News December 16, 2025

திருப்பத்தூர் காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி

image

திருப்பத்தூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் தினம் ஒரு விழிப்புணர்வு தகவல் பதிவிடப்படுகிறது. அவ்வாறு இன்று (டிச.16) குழந்தை திருமணத்தை எதிர்ப்போம் என்ற செய்தி பகிரப்பட்டுள்ளது. மேலும் குழந்தை திருமணம் பற்றிய புகார்கள் 1098 என்ற எண்ணின் மூலம் தெரிவிக்கலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!