News September 13, 2024
எம்.டி., எம்.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுசேரி சென்டாக் மூலம், எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், ஆயுர்வேதம் ஆகிய படிப்புகளுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் கவுன்சிலிங் நடத்தி வருகிறது. இந்நிலையில் எம்.டி., எம்.எஸ்., முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீண்ட காலமாக கவுன்சிலிங் நடத்தாமல் இருந்தது. அதனை அடுத்து, இந்த படிப்புகளுக்கு 2024 -25ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்களை சென்டாக் நேற்று அறிவித்துள்ளது.
Similar News
News October 17, 2025
புதுவை: பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டல்

புதுச்சேரி பூமியான்பேட்டை, பாவாணர் நகர் அருகே அவ்வழியாக செல்லும் பொதுமக்களை வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி வருவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்த பாவாணர் நகர், 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை நேற்று கைது செய்தனர்.
News October 17, 2025
தீபாவளி பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர்

புதுச்சேரி, திலாசுபேட்டை தொகுதியில் தீபாவளி பரிசு தொகுப்பாக ரூ.585 மதிப்புள்ள 2-கிலோ சர்க்கரை, 2-கிலோ சூரியகாந்தி எண்ணெய், 1-கிலோ கடலைப்பருப்பு, ரவை, மைதா அரைக்கிலோ என தீபாவளி தொகுப்பை பொதுமக்களுக்கு மாநில முதல்வர் ரங்கசாமி வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன், அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், அரசு செயலர் முத்தம்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
News October 16, 2025