News December 31, 2024
எம்.எல்.ஏ ஈஸ்வரன் தமிழக அரசுக்கு வேண்டுகோள்

2025ஆம் ஆண்டுக்கான தைப்பொங்கல் வாழ்த்துக்களை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலையை முழுமையாக கொடுக்க வேண்டும் என்றும், அரசு இதில் விரைந்து நடவடிக்கை வேண்டும் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News January 10, 2026
நாமக்கல்: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

நாமக்கல் மக்களே பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 10, 2026
இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (10-01-2026) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) ரூ. 142- ஆகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.90- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.60- ஆக நீடித்து வருகிறது. முட்டையின் தேவை குறைந்துள்ளதால் முட்டை விலை படிப்படியாக சரிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
News January 10, 2026
நாமக்கல்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க


