News September 14, 2024

எம்.எல்.ஏ இல்லத் திருமண விழாவில் முன்னாள் முதல்வர்

image

அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு ரவி இல்ல திருமண வரவேற்பு இன்று மாலை மணவாள நகரில் நடந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், கே. சி. வீரமணி, பி. வி.ரமணா, அதிமுக அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ ஹரி உள்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர்

Similar News

News September 18, 2025

திருவள்ளூர் மக்களே உங்களுக்காக தான் இந்த செய்தி

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று(செப்.18) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News September 17, 2025

தொழிற்பயிற்சி நிலையங்கள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

2025-ஆம் ஆண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான விண்ணப்பக் கால அவகாசம், செப்டம்பர் 30, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு, மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும் என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News September 17, 2025

திருவள்ளூர்: சாலைகளில் கொடி, பேனர்களுக்குத் தடை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளிலும் (Centre Median), தற்காலிகமாக எந்தவிதமான கொடிகளும் அமைக்கப்படாமல் கண்காணிக்க வேண்டும் எனவும், மீறினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!