News March 21, 2024
எம்பி தேர்தல்: அரசியல் கட்சியினருக்கு ஆலோசனை

கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு
தேர்தல் முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பர்கூர், ஊத்தங்கரை, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்துகொண்டனர்.
Similar News
News December 15, 2025
கிருஷ்ணகிரி: மக்கள் குறைதீர்வு கூடத்தில் 531 மனுக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று (டிச-15) ஆட்சித்தலைவர் தினேஷ்குமார், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம், பல்வேறு கோரிக்கைகள் குறித்து 531 மனுக்கள் பெறப்பட்டன. பின் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், துறை சார்ந்த அலுவலர்களிடம் கொடுத்து மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு உரிய தர வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
News December 15, 2025
கிருஷ்ணகிரியில் வாகன ஏலம் அறிவிப்பு!

கிருஷ்ணகிரி காவல்துறை சார்பில் வாகன ஏலம் அறிவிக்கப்பட்டது. மதுவிலக்கு அமல்பிரிவில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்த 73 வாகனங்கள், வரும் (டிச.23) காலை 10 மணியளவில் ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. மேலும், ஏலத்திற்கு வருவோர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. வாகனம் வாங்க விரும்புபவர்களுக்கு ஷேர்!
News December 15, 2025
கிருஷ்ணகிரி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <


