News April 23, 2025
எமபயம் போக்கும் திருக்கடையூர் அமிர்த்கடேஸ்வரர்

திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இங்கு அமிர்தகடேஸ்வரரும், அபிராமி அம்மையாரும் மூலவர்களாக உள்ளனர். தன்னை நாடி வந்த மார்க்கண்டேயனின் உயிரை எமனிடம் இருந்து காத்த அமிர்தகடேஸ்வரரை வழிபட்டால் நோய் மற்றும் தோஷங்கள் நீங்கி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்குள்ள சிவனுக்கு பாசக்கயிறு தடம் இருப்பாத கூறப்படுகிறது. தெரியாதவர்களுக்கு ஷேர் செய்யவும்
Similar News
News November 28, 2025
பெரம்பலூர் மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது பெரம்பலூர் மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (நவ.29) சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 28, 2025
பெரம்பலூர்: SIR படிவம் நிரப்பும் பணி தீவிரம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வெங்கலம் அருகே உள்ள தொண்டப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கலான, அனுக்கூர் மற்றும் அ.குடிக்காடு ஆகிய கிராமத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, SIR படிவம் திருத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே பொதுமக்கள் பலர் SIR படிவத்தை பதிவு செய்து வருகின்றனர்.
News November 28, 2025
பெரம்பலூர்: கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு

பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சில்ட்ரன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டது. பின்பு வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் கர்ப்பிணி பெண்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் பல வகைகளை உண்ண வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கினார்.


