News May 7, 2025
எப்படி இருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி?

‘டூரிஸ்ட் பேமிலி’ படம் பிரஸ் காட்சியிலேயே பலரின் பாராட்டை பெற்றது. ட்விட்டரில் ரசிகர்கள், தமிழில் இப்படி ஒரு ஃபீல் குட் படத்தை பார்த்து நீண்ட நாள்களாகிவிட்டது என தெரிவிக்கின்றனர். சசிகுமார் ஒரு எமோஷனல் சீனில் ஆக்ட்டிங்கில் அசத்தி இருப்பதாக குறிப்பிடுகிறார்கள். சிம்ரனும், அவரின் 2-வது மகனாக வரும் நடிகரும் சிறப்பாக நடித்திருப்பதாகவும் பாராட்டுகின்றனர். நீங்க படம் பாத்தாச்சா?
Similar News
News August 11, 2025
வணிகமயமான கல்வி, மருத்துவம்: மோகன் பகவத்

கல்வி, மருத்துவம் ஆகியவை இன்று எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்டதாக RSS தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். ஒரு காலத்தில் சேவை துறைகளாக இருந்த கல்வி, மருத்துவம் இப்போது வணிகமயம் ஆகிவிட்டதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். தரமான புற்றுநோய் சிகிச்சை என்பது இந்தியாவில் 8 – 10 நகரங்களில் மட்டுமே கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோடி தலைமையிலான அரசு குறித்த விமர்சனமாகவே இது பார்க்கப்படுகிறது.
News August 11, 2025
கேஸ் அடுப்பு வாங்குவதற்கு முன்.. இத கவனியுங்க!

பல பிராண்டுகளில் கேஸ் அடுப்புகள் கிடைப்பதால், அவற்றில் எது தரமானது என்ற குழப்பம் இனி வேண்டாம். கேஸ் அடுப்புகளுக்கு ஸ்டார் ரேட்டிங் வழங்கும் திட்டம் 2026 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என மத்திய மின்சார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ரேட்டிங், அடுப்புகளின் நீடிக்கும் திறன், சூடாக்கும் திறன் மற்றும் தரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு, அடுப்பின் மீதே ஒட்டப்பட்டிருக்கும். SHARE IT.
News August 11, 2025
சுதந்திர தினம்.. இன்று முதல் அதிரடி ஆஃபர்

சுதந்திர தினத்தையொட்டி, ‘Air India Express’ விமான பயண கட்டணத்தில் அதிரடி ஆஃபர் அறிவித்துள்ளது. இன்று முதல் 15-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் 50 லட்சம் பயணியருக்கு கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. அதன்படி, உள்நாட்டு விமான பயண கட்டணம் ₹1,279, சர்வதேச விமான பயண கட்டணம் ₹4,279லிருந்து தொடங்குகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.