News April 4, 2025
என் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், “என் கல்லூரி கனவு” எனும் உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 6, 2025 மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது ஆட்சியர் அறிவித்துள்ளார். இதில் நிபுணர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர்.
Similar News
News November 28, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக 28,29 மற்றும் 30 தேதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் நீர் நிரம்பியுள்ள நீர் நிலைகளில் குளிப்பதையும் கால்நடைகளை குளிப்பாட்டுவதையும் தவிர்க்க வேண்டும். ஆடு மாடுகளை மின்கம்பத்தில் கட்ட வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
News November 28, 2025
மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.28) அரைநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!
News November 28, 2025
மயிலாடுதுறை: இந்த நம்பரை SAVE பண்ணுங்க!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இயற்கை இடர்பாடுகள் மழை சேதம் தொடர்பான புகார்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1077 மற்றும் 04364-222588 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


