News January 2, 2025
என் எஸ் கிருஷ்ணன் வீட்டை பார்வையிட்ட வைரமுத்து

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சமீபத்தில் வருகை தந்த கவிஞர் வைரமுத்து கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் வீட்டை சென்று பார்வையிட்டு அது சிதலமடைந்து இருப்பதை கண்டு அவரது முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.1941இல் கட்டப்பட்ட ‘மதுரபவனம்’ மாளிகை ஓர் உயரமான நோயாளியாக உருமாறிக் கிடந்தது என்று குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டை சீரமைக்க கோரிக்கைகள் எழுந்து வருகின்றது.
Similar News
News December 13, 2025
குமரில் குட்கா கடத்திய 2 பேர் கைது!

குமரி-கேரள எல்லை சோதனை சாவடி வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் காரில் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் எல்லை பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காரில் போலி நம்பர் பிளேட் பொருத்தி கேரளாவில் இருந்து குமரிக்கு 225 கிலோ குட்கா கடத்தி வந்ததாக சசிகுமார், விஜய் பிரதீப் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை.
News December 13, 2025
குமரி: மரத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பலி

தக்கலை மருதவிளை கவுதம ராபின்சன் (31) மரம் ஏறும் தொழிலாளி. நேற்று கவுதம ராபின்சன் மருந்துக்கோட்டையில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக தென்னை மரத்தில் ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவுதம ராபின்சன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தக்கலை போலீசார் விசாரணை.
News December 13, 2025
குமரி: 10th படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! ரூ.56,900 சம்பளம்

குமரி மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் <


