News August 26, 2024
எந்த செல்வாக்கில் அருகருகே பணியாற்றுகிறீர்: சீமான் காட்டம்

திருச்சியில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எந்த செல்வாக்கில் நீங்களும் உங்கள் மனைவியும் அருகருகே பணியை பெற்றுக் கொண்டு செயல்பட்டு வருகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். மேலும் ஐ.பி.எஸ். படித்த திருச்சி எஸ்.பி. அவரது வேலையை மட்டும் பார்க்க வேண்டும், திமுகவில் வேலை செய்ய வேண்டுமானால் ஐ.டி. வேலைக்கு போகட்டும் என்று கடுமையாக சாடினார்.
Similar News
News September 17, 2025
திருச்சியில் நாளை மின்தடை பகுதிகள் இதுதான்!

திருச்சி மக்களே நாளை 18.09.2025 ஆம் தேதி நமது திருச்சியில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்தடை ஏற்பாடு பகுதிகள்!
❌கே.சாத்தனுர்
❌திருவானைக்காவல்
❌வராகநேரி
❌தென்னுர்
இதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மிஞ்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை SHARE பண்ணுங்க
News September 17, 2025
பாலியல் வழக்கில் இரு வாலிபர்களுக்கு ஆயுள்தண்டனை

திருச்சி, ஊனையூர் கிராமத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இரு வாலிபர்களுக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
News September 17, 2025
மயிலாடுதுறை – திருச்சி மெமு ரயில் சேவையில் மாற்றம்

மயிலாடுதுறையில் இருந்து காலை 7:45 மணிக்கு புறப்படும் மயிலாடுதுறை – திருச்சிராப்பள்ளி மெமு ரயிலானது வரும் 17, 18, 19, 20, 21, 22 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை – தஞ்சாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மேற்குறிப்பிட்ட தேதிகளில் தஞ்சாவூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9:10 மணிக்கு புறப்பட்டு திருச்சி ஜங்ஷன் வந்தடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.