News January 6, 2025
எண்ணெய் வித்துக்களின் அரசியான எள் சாகுபடி

கோவை வேளாண்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், கோவை ஆண்டிற்கு சராசரியாக 4,327 ஹெக்டேரில், எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. எதிர் வரும் இறவை சாகுபடியில், தைப்பட்டதில் எண்ணெய் வித்துக்களின் அரசியான, எள் சாகுபடி செய்யலாம். எள் குறைந்த வயதுடையது (90 நாட்கள்), அதிக நீர் தேவை இல்லாதது. 250 மி.மீ அளவு மட்டுமே நீர் தேவை உள்ளது. குறைந்த மண்வளத்திலும் சாகுபடி செய்யலாம் என கூறியுள்ளனர்.
Similar News
News September 1, 2025
ஆன்லைன் முதலீடு மோசடி: ரூ.71 லட்சம் இழந்த முதியவர்

கோயம்புத்தூர், குனியமுத்தூரைச் சேர்ந்த முருகேசன் (62) என்பவரிடம், சஞ்சய் ரெட்டி மற்றும் லாவண்யா ஆகியோர் ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.71 லட்சத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், சொன்னபடி பணத்தைத் திரும்பத் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முருகேசன் நேற்று குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் தேடி வருகின்றனர்.
News September 1, 2025
துப்பாக்கியுடன் 2 பேர் கைது – 18 தோட்டாக்கள் பறிமுதல்

சூலூர் சுகந்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி மேரி ஜூலியானா பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 28ஆம் தேதி இவரது கடைக்கு சிகரெட் வாங்குவது போல் வந்த இருவர் அவரை தலையில் சுத்தியால் தாக்கி விட்டு 4 சவரன் தங்க நகைகளை பறித்து சென்றனர். இவ்வழக்கில் சூலூர் போலீசார் குணசேகரன், விஜயகுமார் சாணி உள்ளிட்ட இருவரை பிடித்து விசாரித்ததில் துப்பாக்கி, 18 தோட்டாக்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
News September 1, 2025
கோவை : இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (31.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.