News September 13, 2024

எடப்பாடி வருகிறார் எதிர்கட்சித் தலைவர்

image

எடப்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று எடப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய திட்டப் பணிகளுக்கும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதற்கு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வருகை தர உள்ளார். அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 27, 2025

இளம்பிள்ளை: ஒரு APP-ஆல் பறிபோன 10 லட்சம்!

image

சேலம், இளம்பிள்ளையை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதில் செல்போனில் RTO APK டவுன்லோட் செய்ததாகவும், தொடர்ந்து அவர்கள் கூறிய வழிமுறையில் சென்றதால், தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து ரூ.10,78,485 டெபிட் ஆகிவிட்டதாகவும், இழந்த பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்றும் புகார் தெரிவித்துள்ளார்.

News November 27, 2025

கெங்கவெல்லி அருகே நண்பர்கள் 2 பேர் பலி!

image

கெங்கவெல்லி அருகே தம்மம்பட்டி கோனேரிப்பட்டியை சேர்ந்த நண்பர்கள் ஷாஜகான் மற்றும் அரவிந்த். இருவரும்நேற்று இரவு, கொண்டையம் பள்ளிக்கு பைக்கில் ஹெல்மெட் அணியாமல் சென்றனர். கோனேரிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த போர்வெல் லாரி பின்பகுதியில், பைக்கை மோதியுள்ளனர். இதில் இருவரும் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 26, 2025

சேலம்: அதிமுக பிரமுகர் கைது பரபரப்பு

image

சேலம் மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சங்கர் என்கிற சேகோ சங்கர். இவர் ஆத்தூர் கோரி தெரு மல்லிகா கண்ணன் திருமண மண்டபம் அருகில் வசித்து வரும் திவ்யா என்கிற பாத்திமா என்ற பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக இன்று அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் சங்கரை ஆத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனால் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

error: Content is protected !!