News October 24, 2024

எச்.ராஜாவிற்கு தகுதி இல்லை: செல்வப்பெருந்தகை

image

திருச்சியில் காங்கிரஸ் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை பொது கணக்குக் குழுத் தலைவருமான செல்வ பெருந்தகை அளித்த பேட்டியில் இந்தியா கூட்டணி வலுவாக இருக்கிறது. இந்தியா கூட்டணி பற்றி பேச எச்.ராஜாவிற்கு தகுதி இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடத்தை விட்டு விட்டு பாடியவர்கள் தான் சீமான் விமர்சிக்க வேண்டும் ஆனால் அவர் தமிழ்த்தாய் வாழ்த்துக்களை விமர்சிக்கிறார் என்று கூறினார். COMMENTIT

Similar News

News December 8, 2025

திருச்சி: பேருந்தில் இருந்து கீழே விழுந்து கவலைக்கிடம்

image

அரியலூரில் இருந்து புள்ளம்பாடி வழியாக திருச்சி வந்த அரசு பேருந்தில் பயணம் செய்த அடையாளம் தெரியாத வாலிபர், நேற்று தூக்கத்தில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பயணியின் விபரங்கள் தெரியாததால் கல்லக்குடி போலீசார் காயமடைந்தவர் எந்த ஊரை சேர்ந்தவர் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

News December 8, 2025

திருச்சி: ஆட்டோ மோதி பரிதாப பலி

image

பெருகமணி ரயில்வே ஸ்டேஷன் அருகே பெட்டவாய்த்தலை நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் மீது, பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சென்ற ஆட்டோ நேற்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டூவீலரில் வந்த கொடியாலம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 7, 2025

திருச்சில் அரிய வாகை ஆமைக் குஞ்சுகள் பறிமுதல்

image

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுபிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, அதில் மலேசியாவை சேர்ந்த இரு பயணிகள் கடத்திவந்த 5,061 ஆமைக்குஞ்சுகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஆமைக்குஞ்சுகளை கடத்திவந்த இரண்டு பேரிடமும் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!